சமத்துவ நடைபயணம் நிறைவுற்றது!

08 Feb, 2026

மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநிலச் செய்தி தொடர்பாளர் தோழர். மருது தலைமையில் கழக வழக்கறிஞர் அணி மற்றும் வழக்கறிஞர் மாணவர்கள் சார்பாக அம்பேத்கர் மணி மண்டபத்தில் இருந்து சமத்துவ நடைபயணம் தொடங்கியது. இந்த நடைபயணத்தை மூத்த வழக்கறிஞர்கள் தோழர். ப. பா. மோகன் மற்றும் தோழர். பாரிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

 

நடை பயணத்தில் செல்லும் வழியில் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பிரசுரத்தை பொது மக்களிடம் தோழர்கள் விநியோகித்தனர். வழக்கறிஞர் மாணவர்கள் உற்சாகமாக இதில் பங்கெடுத்துக் கொண்டனர். 

இறுதியாக, நடைபயணம் பொரியார் திடலை அடைந்தது. மூத்த வழக்கறிஞர் தோழர். சுசில் குமார் சமத்துவ நடைபயணத்தை முடித்து வைத்தார். 

செய்திகள்