03 Mar, 2026
சாதியற்ற, சமத்துவ பண்பாட்டை படைக்கும் நோக்கில் தமிழ்நாட்டு உழைக்கும் மக்களின் முற்போக்குப் பண்பாட்டை உயர்த்தி பிடிக்கும் வகையில் தமிழ்நாட்டு பண்பாட்டுப் பெருவிழா பிப்ரவரி 21 ஆம் தேதி நடைபெற இருந்தது. ஆனால், போலீசின் திடீரென அனுமதி மறுப்பால் ரத்தானது. போலீசின் இந்த அராஜகத்தை கண்டித்து ஜனநாயக சக்திகள் தங்களது கண்டனங்களை பதிவு செய்து பண்பாட்டுப் பெருவிழாவிற்கு முழு ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வருகின்றன மார்ச் 7 ஆம் தேதி மதுரை தமுக்க மைதானத்தில் பொதுமக்கள் ஜனநாயக சக்திகளின் பெரு ஆதரவுடன் தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா நடைபெறவுள்ளது.
இப்பண்பாட்டுப் பெருவிழாவிற்கு தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் தோழர். மீ.த. பாண்டியன் அவர்கள் அழைக்கிறார்.