01 Mar, 2026
"சாதி,மதம் கடந்து காதலிக்க, மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்!" - எனும் எழுச்சிமிகு முழக்கத்தோடு, தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா வரும் பிப்ரவரி 21 அன்று மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இவ்விழாவிற்காக பொதுமக்களிடம் கருத்து கேட்பது, பேட்டிகள் எடுப்பது, உள்ளடக்க உருவாக்கம் (Content Creation), வடிவமைப்பு (Designing), ஒளிப்பதிவு (Camera Work) மற்றும் விளம்பரப்படுத்துதல் (Promotion) போன்ற பல்வேறு சமூக ஊடகப் பணிகள் உள்ளன.
சமூக மாற்றத்தில் அக்கறையுள்ள ஜனநாயக சக்திகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இப்பணியில் இணைய அனைவரையும் உரிமையுடன் அழைக்கிறோம். விருப்பமுள்ளவர்கள் 9626162209 என்ற எமது எண்ணிற்குத் தொடர்பு கொள்ளவும்.
சாதி எதிர்ப்பு மற்றும் சமத்துவ உணர்வு கொண்ட அனைவரும் ஒன்றிணைவோம்!