26 Feb, 2026
சாதி ஆதிக்கத்திற்கு எதிரான பண்பாட்டு எழுச்சி | வெளியீடு
கடந்த டிசம்பர் 28, 2025 அன்று மதுரையில் “சாதி, மதம் கடந்து காதலிக்க – மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்!” என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச்செயலாளர் தோழர் ரவி (எ) செல்வகணேஷ் – தோழர் ராதிகா இணையரின் சாதி மறுப்பு புரட்சிகர மணவிழா எழுச்சிகரமாக நடைபெற்றது. இம்மணவிழாவானது, சாதி ஆதிக்கத்திற்கு எதிராக தலித் மக்களிடையே ஏற்பட்டுவரும் பண்பாட்டு எழுச்சிக்கு முகங்கொடுப்பதாகவும், சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான பண்பாட்டு போர் முழக்கத்தின் பிரகடனமாகவும் அமைந்தது.
இதனையொட்டி புதிய ஜனநாயகம் ஜனவரி 2026 இதழில் வெளியான “சாதி ஆதிக்கத்திற்கு எதிரான பண்பாட்டு எழுச்சி”, “ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான… பண்பாட்டு எழுச்சி நாள்” மற்றும் “புரட்சிகர மணவிழாவில் தோழர்களின் உரைகள்” ஆகிய கட்டுரைகளை தொகுத்து இந்நூலை வெளியிடுகிறோம்.
மேலும், தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களிலும் தலித் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டு வருவதை பல்வேறு சம்பவங்கள் உணர்த்துகின்றன. அத்தகைய சில சம்பவங்களையொட்டி வினவு வலைத்தளத்தில் வெளியான கட்டுரைகளையும் இந்நூலில் இணைத்துள்ளோம்.
இந்நூல் தலித் மக்களிடையே ஏற்பட்டுவரும் எழுச்சியை புரிந்துகொள்வதற்கு உதவுவதோடு, சாதி ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு மாற்றுப் பண்பாட்டை நிறுவுவதற்கான தூண்டுதலாகவும் அமையும்.
வெளியீடு :
சாதி ஆதிக்கத்திற்கு எதிரான பண்பாட்டு எழுச்சி
முதல் பதிப்பு : பிப்ரவரி 2026
வெளியிடுவோர் :
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
முகவரி :
எண்: 6, கருமாரப்பேட்டை,
மஞ்சக்குப்பம், கடலூர் – 607001
தமிழ்நாடு.
தொடர்புக்கு : 99623 66321
நன்கொடை : ₹ 30