16 Feb, 2026
சாதியற்ற சமத்துவப் பண்பாட்டைப் படைக்கும் நோக்கத்தில், தமிழ்நாட்டின், உழைக்கும் மக்களின் முற்போக்குப் பண்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் வகையில் “தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா”-விற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இப்பெருவிழாவின் நோக்கத்தை சமூக ஊடகங்களில் இன்னும் வீச்சாக கொண்டு செல்வதற்கு ஏற்ப, அனைவரும் பங்கேற்கும்படி உரிமையுடன் கோருகிறோம்.
தலைப்புகள்:
"சாதி, மதம் கடந்து காதலிக்க, மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்"
"அனைவரையும் நேசிப்போம்! சாதியை மறுப்போம்! ஆணவப் படுகொலையை தடுப்போம்"
என்கிற அடிப்படையில் பொதுமக்களிடம் உணர்த்தும் வகையில் மூன்று நிமிட காணொளிகளை (குறும்படம், ஏ.ஐ, மற்றும் பிற வடிவங்களில்) எமது மின்னஞ்சல் முகவரிக்கும் info@peruvizha.com, தொடர்பு எண்ணிற்கும் 9626162209, பிப்ரவரி 19 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தமது படைப்புகள் எமது சமூக ஊடக பக்கங்களிலும் இணையதளங்களிலும் பதிவேற்றப்படும்.