சாதி மறுப்பு இணையர்களை சந்தித்து ஆதரவளித்த தோழர் ரவி

தூத்துக்குடி

"எழுச்சி பயணத்தின்" முதல் நாளாக மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர். ரவி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி துணை மண்டலச் செயலாளர் தோழர். அர்ஜுன் ஆகியோர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இணையர்களை சந்தித்து ஆதரவளித்தனர்.

 

தங்களது குடும்பங்களில் இருந்து வந்த நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்டதை பற்றி தோழர்களிடம் பகிர்ந்து கொண்டனர். பெண்ணின் உடைய தம்பி குழந்தை பிறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு கூட கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி அடித்து இணையத்தில் பரப்பியதையும் குறிப்பிட்டனர்.