❯
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பணிகள் தமிழ்நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர். அமிர்தா, தோழர். ஆகாஷ் மற்றும் தந்தைப் பெரியார் திராவிட கழகத்தின் மகளிர் அணி அமைப்பாளர் தோழர்.சித்ரா ஆகியோர் தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆதி மாறன் அவர்களை சந்தித்து பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பிதழை வழங்கினர்.