இளவரசன்

தருமபுரி

நாள்: 04/07/2013

 

தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாயில் உள்ள நத்தம் காலனி தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த இளவரசனும் செல்லன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த திவ்யாவும் காதலித்து மணம் செய்து கொண்டனர். திவ்யாவின் தந்தை மர்மமான மரணத்தை தொடர்ந்து இவரது உடலைக் கொண்டு நத்தம் காலனி பகுதியை சூரையாடியது பாமக. நத்தம் காலனி பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட வீடுகளை அடித்து உடைத்து, தீ வைத்தது. சாதிவெறியர்களின் அச்சுறுத்தலில் நீதிமன்றத்தில் அம்மாவுடன் இருக்கவே விரும்புகிறேன் என திவ்யா கூறினார். திவ்யா தனது தாயுடன் சென்ற நிலையில், சில நாட்களிலேயே (ஜூலை 4, 2013) இளவரசன் ரயில் தண்டவாளத்தில் தலை நசுங்கிய நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்

 . .